/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடந்து சென்றவர் டூ - வீலர் மோதி பலி
/
நடந்து சென்றவர் டூ - வீலர் மோதி பலி
ADDED : பிப் 23, 2025 07:59 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னகளக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 45; அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
கடந்த 18ம் தேதி மாலை, பணிக்கு சென்றுவிட்டு திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து, வீட்டிற்கு தக்கோலம் சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
ஒரத்தூர் பிரிவு சாலையருகே வந்தபோது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் மோகன்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அவ்வழியாக சென்றவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். சம்பவம் குறித்து மோகன்ராஜ் மனைவி அனிதா அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

