/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோடையிலும் வற்றாத ஏரிகள் ஆர்.கே.பேட்டையில் மகிழ்ச்சி
/
கோடையிலும் வற்றாத ஏரிகள் ஆர்.கே.பேட்டையில் மகிழ்ச்சி
கோடையிலும் வற்றாத ஏரிகள் ஆர்.கே.பேட்டையில் மகிழ்ச்சி
கோடையிலும் வற்றாத ஏரிகள் ஆர்.கே.பேட்டையில் மகிழ்ச்சி
ADDED : ஏப் 22, 2024 11:14 PM

ஆர்.கே.பேட்டை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள ஏரிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், கடந்த ஏழு ஆண்டுகளாக பருவமழை தவறாமல் பெய்து வருகிறது. இதனால், ஏரிக்கு ஆண்டுதோறும் நீர்வரத்து இருந்து வருகிறது. 2015ல் கடும் வறட்சி நிலவிய நிலையில், ஏரி, குளங்கள் வறண்டன.
குடிநீர் தட்டுப்பாடும் நிலவியது. அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பருவமழை தவறாமல் பெய்து வருகிறது.
இதனால், ஏரி, குளங்களில் தொடர்ந்து நீர் இருப்பு நீடித்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்வளம் சிறப்பாக உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு இன்றி இப்பகுதிவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம், பள்ளிப்பட்டு அடுத்த பாண்டவேடு, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் நிரம்பி, தாமரைக் கொடிகளுடன் பசுமையாகக் காணப்படுகிறது.

