/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய பெரியகுப்பம் பஸ் நிலையம்
/
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய பெரியகுப்பம் பஸ் நிலையம்
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய பெரியகுப்பம் பஸ் நிலையம்
'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய பெரியகுப்பம் பஸ் நிலையம்
ADDED : ஆக 29, 2024 02:40 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியகுப்பம் பேருந்து நிலையம், முறையாக பராமரிப்பு இல்லாததால், தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது.
திருவள்ளூர் பெரியகுப்பத்தில், நகராட்சி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட கடைகள், பயணியர் அமர நிழற்குடை உள்ளது.
திருவள்ளூர் தேரடியில் இருந்து ரயில் நிலையத்திற்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணியர், இந்த பேருந்துகள் வாயிலாக, திருவள்ளூர் நகரில் உள்ள திரு.வி.க., பேருந்து நிலையத்திற்கு பயணம் செய்கின்றனர்.
தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையம், முறையாக பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.
பகல் மற்றும் இரவு நேரத்தில், தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. பேருந்து நிலையத்திற்குள், பகல் நேரங்களில் சிலர் பேருந்து நிழற்குடையில் ஓய்வெடுத்தும், இரவில் மதுபானம் அருந்தியும் வருகின்றனர்.
இதன் காரணமாக, பெண்கள் பேருந்து நிலையத்திற்கு வர அச்சப்படுகின்றனர்.
பெரியகுப்பம் பேருந்து நிலையத்தில் இருந்து, மணவாளநகர், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி செல்லும் பேருந்துகளை இயக்க நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து உள்ளது.
ஆனால், போக்குவரத்து துறையினர் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுக்கின்றனர்.
எனவே, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், பெரியகுப்பம் பேருந்து நிலையத்தை சீரமைத்து, கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.