/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் விரைவு ரயில் நிறுத்த காங்., எம்.பி.,யிடம் கோரிக்கை மனு
/
திருவள்ளூரில் விரைவு ரயில் நிறுத்த காங்., எம்.பி.,யிடம் கோரிக்கை மனு
திருவள்ளூரில் விரைவு ரயில் நிறுத்த காங்., எம்.பி.,யிடம் கோரிக்கை மனு
திருவள்ளூரில் விரைவு ரயில் நிறுத்த காங்., எம்.பி.,யிடம் கோரிக்கை மனு
ADDED : செப் 05, 2024 08:11 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில், நீண்ட துார விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி, எம்.பி.,யிடம் ரயில் பயணியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
திருவள்ளூர் ரயில் பயணியர் சங்கத்தினர், திருவள்ளூர் லோக்சபா தொகுதி காங்.,-எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் அளித்துள்ள மனு:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, திருவள்ளூர் வழியாக, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட வட, தென் மாவட்டங்களுக்கும், விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, புறநகர் மின்சார ரயில்களில், தினமும் ஒரு லட்சம் பயணியர் மற்றும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வியாபாரம் சம்பந்தமாக, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கும், பயணிக்கின்றனர். இவர்கள், வெளியூர் செல்ல, சென்னை சென்ட்ரல் அல்லது அரக்கோணத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
குடும்பத்துடன் பயணிப்போர், முதியோர், குழந்தைகளை அழைத்துச் செல்ல சிரமப்படுகின்றனர். கால விரயம், வீண் செலவு மற்றும் அலைச்சல் ஏற்படுகிறது.
எனவே, சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக இயக்கப்படும், கோவை, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற, எம்.பி., சசிகாந்த் செந்தில், ரயில்வே துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.