/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொபைல்போன் பறித்தவர் போலீசில் ஒப்படைப்பு
/
பொபைல்போன் பறித்தவர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : மே 17, 2024 08:44 PM
கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் மனிஷ்குமார், 21. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
சிப்காட் வளாக சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு மொபைல் போனில் பேசியபடி வேலைக்கு, நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அவரை பின் தொடர்ந்து பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த இரு நபர்கள், மனிஷ்குமாரின் மொபைல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.
பைக்கை மனிஷ்குமார் இருக்கமாக பிடித்துக்கொண்டார். இருவரில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், அவ்வழியாக நடந்து சென்ற தொழிலாளர்கள் சிலர், பைக்குடன் ஒருவரை மட்டும் பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட நபர், ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் பகுதியை சேர்ந்த விஜய், 22, என்பது தெரியவந்தது. பைக் மற்றும் மொபைல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

