/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
* படங்கள் மட்டும் 'தினமலர்' செய்தி எதிரொலி மரண குழியாக இருந்த திருவள்ளூர் நெடுஞ்சாலை சீரமைப்பு

ADDED : பிப் 11, 2025 12:17 AM

கடம்பத்துார்கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது தொடுகாடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியே தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில், தொடுகாடு பகுதியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளன.
இந்நிலையில், தற்போது, ஸ்ரீபெரும்புதுாரில் நடந்து வந்த பாதாள சாக்கடை பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும் பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' மூடி சேதமடைந்து மரணகுழிகளாக மாறியுள்ளது. இப்பகுதியில் காவல்துறை சார்பில் பேரிகார்டு வைக்கப்பட்டும், வாகன ஒட்டிகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் சென்று வருவதாகவும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி நிர்வாகத்தினர், பாதாள சாக்கடை மேன்ஹோல் பகுதி மற்றும் கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு தடுப்பு அமைத்து சீரமைத்தனர். நெடுஞ்சாலைத் துறையினர் கற்கள் பெயர்ந்த சாலையையும் சீரமைத்தனர்.