/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளஸ் 2 பொது தேர்வு இன்று துவக்கம் 109 மையங்களில் 28,514 பேர் பங்கேற்பு
/
பிளஸ் 2 பொது தேர்வு இன்று துவக்கம் 109 மையங்களில் 28,514 பேர் பங்கேற்பு
பிளஸ் 2 பொது தேர்வு இன்று துவக்கம் 109 மையங்களில் 28,514 பேர் பங்கேற்பு
பிளஸ் 2 பொது தேர்வு இன்று துவக்கம் 109 மையங்களில் 28,514 பேர் பங்கேற்பு
ADDED : மார் 02, 2025 11:56 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று துவங்க உள்ள பிளஸ் 2 பொது தேர்வை, 109 மையங்களில், 28,514 பேர் எழுத உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 2024- -- 25ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 அரசு பொது தேர்வு, இன்று துவங்கி, ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, மாவட்டத்தில் 109 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த மையங்களில், நடப்பாண்டு 13,504 மாணவர்கள், 15,010 மாணவியர் என, மொத்தம் 28,514 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதேபோல், பிளஸ் 1 பொதுத்தேர்வு, வரும் 5 - 27ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை, 14,111 மாணவர்கள், 15,514 மாணவியர் என, மொத்தம் 29,625 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இதற்காக, மாவட்டம் முழுதும், ஐந்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையத்திற்கு, தலா 3 பேர் வீதம் மொத்தம், 15 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இங்கு, 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து தேர்வு நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லவும், தேர்வு முடிந்தது விடைத்தாள் கட்டுக்களை பெறவும், 27 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்வு எழுதுவோரை கண்காணிக்க, 150 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு எழுதும் மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.