/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 3,669 ஓட்டுச் சாவடிகள் சீரமைக்கப்பட்ட பட்டியல் வெளியீடு
/
திருவள்ளூரில் 3,669 ஓட்டுச் சாவடிகள் சீரமைக்கப்பட்ட பட்டியல் வெளியீடு
திருவள்ளூரில் 3,669 ஓட்டுச் சாவடிகள் சீரமைக்கப்பட்ட பட்டியல் வெளியீடு
திருவள்ளூரில் 3,669 ஓட்டுச் சாவடிகள் சீரமைக்கப்பட்ட பட்டியல் வெளியீடு
ADDED : செப் 14, 2024 08:32 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், வரைவு ஓட்டுச் சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. வாக்காளர்கள் அளித்த மனு மற்றும், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள இடங்களில், கூடுதலாக, 34 ஓட்டுச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான, சீரமைக்கப்பட்ட ஓட்டுச் சாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், மாதவரம், மதுரவாயல், திருவொற்றியூர் என, மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில், நடந்து முடிந்த, லோக்சபா தேர்தலில், 16,70,279 ஆண்கள், 17,12,702 பெண்கள், திருநங்கைகள் 729 என, மொத்தம், 33,83,710 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். மாவட்டம் முழுதும், வாக்காளர்கள் ஓட்டு அளிக்க, 3,665 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் சமயத்தில், கூடுதல் வாக்காளர் இருக்கும் இடங்களில், துணை ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் சென்னை தலைமை தோ்தல் அலுவலர் அறிவுரையின் படி, நகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள ஓட்டுச் சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய அறிவுறுத்தியது.
இதன்படி, கடந்த ஆக.29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக, ஆட்சேபணை இருந்தால், எழுத்து பூர்வமாக மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் உள்ள 3,665 ஓட்டுச் சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரைப்படி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்தனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு முன் மொழிவுகள் அனுப்பி வைத்ததின் பேரில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மறுசீரமைக்கப்பட்ட ஓட்டுச் சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதன்படி, மொத்தம் 3,665 ஓட்டுச் சாவடிகளில் தற்போது கூடுதலாக, 34 ஓட்டுச் சாவடிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, மாவட்டத்தில், ஓட்டுச் சாவடி எண்ணிக்கை 3,669 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியல், தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக, கலெக்டர் தெரிவித்தார்.