/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் வடியாத மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சாலையில் வடியாத மழைநீர் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : டிச 07, 2024 02:03 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, ஐ.ஆர்.டி., ரயில்வே கேட் வரையிலான, 300 மீட்டர் சாலை, பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றியச் சாலையாகும். தாசில்தார் அலுவலகம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், போக்குவரத்து துறையின் வாகன ஓட்டுனர் பயிற்சி பிரிவு வளாகம், ஓய்வூதியம் தொடர்பாக கருவூலம் செல்வோர், என தினமும் ஆயிரக்கணக்கானோர் அந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
பல ஆண்டுகளாக அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்த தொடர் மழையில், சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி, சாலை முழுதும் குட்டைகள் போல் மாறியுள்ளன. சாலை இருக்கும் இடம் தெரியாத நிலையில், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாற்றத்துடன் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தினர், உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக அந்த சாலையை புதுப்பிக்க வேண்டும், மழைநீர் வடிந்து செல்ல கால்வாய் அமைக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.