/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கார்டுதாரர்கள் விரல்ரேகை பதிய அறிவுரை
/
ரேஷன் கார்டுதாரர்கள் விரல்ரேகை பதிய அறிவுரை
ADDED : மார் 04, 2025 07:22 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், 'அந்தியோதயா அன்ன யோஜனா' அட்டைதாரர்கள், 49,944 பேர் உள்ளனர். இந்த அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,44,614. இவர்களில், 1,14,589 பேர் விபரங்கள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், 2,46,963 முன்னுரிமை அட்டைதாரர் உள்ளனர். இவர்களின் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 7,55,725. இவர்களில், 5,83,219 பேர் விபரம் மட்டுமே, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, இந்த இரண்டு குடும்ப அட்டைதாரர்களின் மொத்த உறுப்பினர்களில், இதுவரை, 2,02,351 பேர் விரல்ரேகை பதிவு செய்யவில்லை. எனவே, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களின் விரல்ரேகையை அருகே உள்ள ரேஷன் கடைகளில், வரும் 10ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.