ADDED : ஆக 09, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 37. கூலி தொழிலாளியான இவருக்கு சுமதி, 32 என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தன் வீட்டிற்கு வந்த கலைச்செல்வன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் இப்பகுதியில் உள்ள கூவம் ஆற்று தடுப்பணை அருகே கலைச்செல்வன் இறந்து கிடப்பதாக கடம்பத்துார் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

