/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஈசா பெரிய ஏரியில் ஆண் சடலம் மீட்பு
/
ஈசா பெரிய ஏரியில் ஆண் சடலம் மீட்பு
ADDED : நவ 07, 2024 01:15 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி எல்லைக்கு உட்பட்ட ஈசா பெரிய ஏரியில், நேற்று காலை ஆண் உடல் ஒன்று மிதந்தது.
தகவல் அறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், இறந்தவர் கும்மிடிப்பூண்டி காந்தி நகரைச் சேர்ந்த சரவணன், 35, என்பது தெரியவந்தது. திருமணமாகாத அவர், சிறுநீரக பாதிப்பால் நான்கு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், டயாலிசிஸ் சிரமத்தால், மன உளைச்சலுக்கு ஆளாகி, இரு நாட்களுக்கு முன், ஏரியில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.