/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டா நிலங்களை பதிவு செய்ய மறுப்பு சார் - பதிவாளர் அலுவலகம் முற்றுகை
/
பட்டா நிலங்களை பதிவு செய்ய மறுப்பு சார் - பதிவாளர் அலுவலகம் முற்றுகை
பட்டா நிலங்களை பதிவு செய்ய மறுப்பு சார் - பதிவாளர் அலுவலகம் முற்றுகை
பட்டா நிலங்களை பதிவு செய்ய மறுப்பு சார் - பதிவாளர் அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 28, 2024 09:01 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் மற்றும் விவசாயிகள், தங்களது பட்டா நிலங்களை பதிவு செய்ய மறுப்பதாக கூறி, நேற்று மாலை பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில், 2,000க்கும் மேற்பட்டோர் பட்டா நிலங்களை வைத்து வீடு கட்டியும், விவசாயமும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானவை என, தனிநபர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சார் - பதிவாளர் அலுவலகத்தில், பதிவு தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வதில்லை.
இதனால் திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு எங்களது பட்டா நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
மேலும், வங்கி கடன் பெறுவதற்கு பதிவு செய்ய மறுக்கப்படுவதால், வீடு கட்டும் பணிகளும் பாதிக்கிறது. இதனால் ஏழை தொழிலாளிகள், நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொன்னேரி போலீசார் மற்றும் சார் - பதிவாளர் அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, குடியிருப்புவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.