ADDED : ஜூலை 03, 2024 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, கச்சூர் ஊராட்சி ஸ்ரீராமகுப்பம் கிராமத்தில், அரசு நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். விவசாய நிலத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமிப்பு செய்து இரும்பு வலை அமைத்ததால், விவசாய நிலத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி வாசிகள், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு புகார் மனு அளித்தனர். நேற்று ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் தலைமையில், வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.