/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் பழுதான கேமரா சீரமைப்பு பணி மும்முரம்
/
திருத்தணியில் பழுதான கேமரா சீரமைப்பு பணி மும்முரம்
திருத்தணியில் பழுதான கேமரா சீரமைப்பு பணி மும்முரம்
திருத்தணியில் பழுதான கேமரா சீரமைப்பு பணி மும்முரம்
ADDED : மார் 31, 2024 01:27 AM

திருத்தணி:திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் மற்றும் குற்றச்செயல்கள் தடுப்பதற்காக திருத்தணி போலீசார் சார்பில், சென்னை புதிய சாலை,பைபாஸ், சித்துார் சாலை, ம.பொ.சி.,சாலை, அரக்கோணம் சாலை.
சன்னிதி தெரு, அக்கைய்யாநாயுடு சாலை, அரசு மருத்துவமனை, காந்திரோடு மெயின், ஆறுமுக சுவாமி கோவில் தெரு மற்றும் அதிகளவில் மக்கள் கூடும் இடங்கள் என மொத்தம், 60 இடங்களில், 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் எல்.இ.டி., மூலம் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சில கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளன. இதனால் குற்றச்செயல்கள் நடக்கும் போது, குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் போகிறது.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருத்தணி டி.எஸ்.பி.,விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில் போலீசார் பழுதான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் புதிய கேமராக்கள் பொருத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர, தமிழக- ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில் ஏற்கனவே நான்கு கேமராக்கள் உள்ளன.
தற்போது கூடுதலாக இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

