/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறு மின்விசை குழாய் சீரமைக்க கோரிக்கை
/
சிறு மின்விசை குழாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 10, 2024 06:28 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் முத்துக்கொண்டாபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் கூடுதல் குடிநீர் தேவைக்காக அதே தெருவில் ஊராட்சி நிர்வாகம் சிறுமின் விசை குழாய்அமைத்துள்ளது.
இந்த பகுதிவாசிகள் வீட்டு உபயோகத்திற்கு இந்த நீரை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் டேங்கில் நீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட நீர் மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. இதை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் இந்த பகுதிவாசிகள் வேறு பகுதியில் உள்ள சிறுமின் விசை குழாயை தேடி சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது.
இந்நிலையில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள சிறுமின் விசை குழாயை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.