/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராமாபுரம் சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
/
ராமாபுரம் சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 19, 2024 11:12 PM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு வசிப்போர், 2 கி.மீ., தொலைவிற்கு, பேருந்தில் ஏறி காவேரிராஜபுரம் வழியாக ரதிருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, அடிப்படை தேவைகளுக்கு சென்று வரும் நிலை உள்ளது.
இக்கிராமத்தில் இருந்து காவேரிராஜபுரம் வரையிலான சாலையில் மின்கம்பத்தில் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளன.
அதனால், இரவில் இச்சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இருளை பயன்படுத்தி வழிப்பறி பாலியல் தொல்லை சம்பவம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.