/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த நுாலக கட்டடம் சீரமைக்க கோரிக்கை
/
பழுதடைந்த நுாலக கட்டடம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 22, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமத்தில் அமைந்துள்ளது கிளை நுாலகம். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர்.
இந்த நுாலகத்தின் கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. இதனால் இக்கட்டடம் தற்போது பூட்டப்பட்டு உள்ளது. இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், வாசகர்கள் நுாலகத்தை பயன்படுத்த முடியாமலும், புத்தகங்களை வாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
நுாற்றுக்கணக்கான வாசகர்கள் பயன்படுத்தும் இந்த நுாலக கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் விரைந்து சீரமைக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

