/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுளப்பாக்கம் சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க கோரிக்கை
/
சிறுளப்பாக்கம் சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க கோரிக்கை
சிறுளப்பாக்கம் சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க கோரிக்கை
சிறுளப்பாக்கம் சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2024 12:46 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த சிறுளப்பாக்கம் கிராமத்தில் இருந்து அண்ணாமலைச்சேரி செல்லும் சாலையில், பழவேற்காடு ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே சிறுபாலம் ஒன்று அமைந்து உள்ளது.
பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இன்றி கிடப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்கள் எதிர் எதிரே கடக்கும்போது, கால்வாயில் தவறி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் அசம்பாவிதங்கள் நேரிடும்.
இந்த பாலம் ஆங்காங்கே சேதம் அடைந்து கிடந்தது. நம் நாளிதழின் தொடர் செய்தியின் எதிரொலியாக தற்போது அது சீரமைக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பாலத்தின் இருபுறமும் சுவர் அமைக்கவில்லை.
பள்ளி வேன்கள், அரசு பஸ்கள், மீன் வியாபாரிகளின் வாகனங்கள் என தொடர்ந்து பாலத்தின் வழியாக பயணிப்பதால், அசம்பாவிதங்கள் நேரிடும் முன், தடுப்பு சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.