/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுாரில் புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
மெதுாரில் புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : செப் 02, 2024 11:02 PM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் பாரதி நகர் பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. மெதுார், காஞ்சிவாயல், திருப்பாலைவனம், விடதண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள், பொன்னேரி - பழவேற்காடு வழித்தடத்தில் சென்று வரும் அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர். மாலை நேரங்களில் மாணவர்கள் வீடு திரும்ப பள்ளி நுழைவு வாயில் பகுதியில் உள்ள நிழற்குடையில் பேருந்திற்கு காத்திருந்து செல்வர்.
இந்நிலையில், மேற்கண்ட நிழற்குடை உரிய பராமரிப்பு இன்றி போனதால், சேதம் அடைந்து கிடக்கிறது.
நிழற்குடையின் இருக்கைகள், சுவர்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் சிதைந்து உள்ளன.
கட்டடம் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், மாணவர்கள் அங்கு செல்வதில்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் சாலை ஓரங்களில் காத்திருந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேற்கண்ட பள்ளி அருகே உள்ள நிழற்குடையை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு, அங்கு கூடுதல் இருக்கை வசதிகளுடன் புதியது அமைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.