/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு
/
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு
ADDED : ஜூலை 15, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி நகராட்சி, பழைய சென்னை சாலை, நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் விருந்தினர் மாளிகை அருகே, 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று, சாலையோரம் ஊர்ந்து சென்றுள்ளது.
அவ்வழியாக சென்றவர்கள் மலைப்பாம்பை பார்த்ததும், திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து, திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

