/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100நாள் வேலை கேட்டு நெய்தவாயலில் சாலை மறியல்
/
100நாள் வேலை கேட்டு நெய்தவாயலில் சாலை மறியல்
ADDED : ஆக 29, 2024 11:29 PM

மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியம், நெய்தவாயல் ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான 100நாள் பணியாளர்கள் உள்ளன. கடந்த, சில தினங்களாக இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் பணியாளர்களுக்கு 100நாள் வேலை வழங்கப்படவில்லை.
ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பணி வழங்காததால், அதிருப்தி அடைந்த நெய்தவாயல் கிராமவாசிகள் நேற்று, மீஞ்சூர் - வஞ்சிவாக்கம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அன்றாட வாழ்வாதாரத்திற்கு, 100 நாள் பணியை நம்பி இருப்பதாகவும், தற்போது இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும்' தெரிவித்தனர்.
தடையின்றி, 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையடுத்து கிராமவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராமவாசிகளின் மறியல் போராட்டத்தால், மீஞ்சூர் - வஞ்சிவாக்கம் சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.