/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.1.53 கோடியில் சாலை பணி துவக்கம்
/
ரூ.1.53 கோடியில் சாலை பணி துவக்கம்
ADDED : பிப் 24, 2025 03:12 AM
ஆவடி,:ஆவடி மாநகராட்சியில், 1.53 கோடி ரூபாயில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.
ஆவடி மாநகராட்சி சாலை பணிகளுக்காக, 15வது நிதிக்குழு மானியம் மற்றும் நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டம் - 4ன் கீழ், 1.53 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தி, சாலை சீரமைப்பு மற்றும் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை, அமைச்சர் நாசர் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆவடி மேயர் உதயகுமார், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன்படி, 2, 37, 44, 45 வது வார்டுகளில், நான்கு சாலைகள், 74.20 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட உள்ளன. மேலும், 1, 9, 28, 29 ஆகிய வார்டுகளில், நான்கு சாலைகள் சிமென்ட் சாலைகளாக மாற்றப்பட உள்ளன.

