/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார் - பதிவாளர் கைது
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார் - பதிவாளர் கைது
ADDED : ஆக 07, 2024 02:12 AM

திருவள்ளூர்:சொத்து பத்திரம் பதிவு செய்ய 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 60. இவர், சொத்து தொடர்பாக பத்திரம் பதிய ஆர்.கே.பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்துள்ளார்.
ஆர்.கே.பேட்டை பொறுப்பு சார் - பதிவாளராக உள்ள சிவலோகநாதன், 51, என்பவர், சொத்து பத்திரம் பதிய, பழனியிடம் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி நேற்று மாலை பழனி, ஆர்.கே.பேட்டையைசங சேர்ந்த ஆவண எழுத்தர் ஆறுமுகம், 54, என்பவரிடம் ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை அளித்தார்.
அங்கு மறைந்திருந்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆறுமுகத்தை பிடித்து விசாரித்தனர்.
தொடர்ந்து, சார்-பதிவாளர் சிவலோகநாதனிடமும் விசாரணை நடத்தினர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையை தொடர்ந்து, இருவரையும் கைது செய்தனர்.