sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சோதனை சாவடி இல்லாததால் சாராயம், கஞ்சா கடத்தல் அ ம ோகம்

/

சோதனை சாவடி இல்லாததால் சாராயம், கஞ்சா கடத்தல் அ ம ோகம்

சோதனை சாவடி இல்லாததால் சாராயம், கஞ்சா கடத்தல் அ ம ோகம்

சோதனை சாவடி இல்லாததால் சாராயம், கஞ்சா கடத்தல் அ ம ோகம்


ADDED : ஆக 10, 2024 11:05 PM

Google News

ADDED : ஆக 10, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: ஆந்திர மாநிலம் நகரி அடுத்த ஓஜிகுப்பம் பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா மற்றும் நல்லாட்டூர் வழியாக திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக சிவாடா பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் ஆந்திர மாநில எல்லை மற்றும் ஓஜிகுப்பம் செல்லும் வழியாகும். இதனால் ஆந்திராவில் இருந்து எளிதாக கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர்.

ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் கடமைக்காக சிவாடா மற்றும் நல்லாட்டூர் பகுதியில் சோதனை நடத்தி, 5 லிட்டர் சாராயம் விற்றதாக இரண்டு அல்லது மூன்று நபர்கள் மீது வழக்கு பதிந்து கணக்கு காட்டுகின்றனர்.

ஆனால், தினமும் கள்ளச் சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். எனவே மாவட்ட எஸ்.பி., விரைந்து நடவடிக்கை எடுத்து, கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் தடுப்பதற்கு மேற்கண்ட இரு இடங்களில் சோதனை சாவடி அமைத்து, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

தொடரும் சூதாட்டம்


திருவாலங்காடு சுற்றியுள்ள கிராமங்களில் பலரும் சூதாட்டம் நடத்தி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர்.

திருவாலங்காடு, மணவூர், சின்னம்மாபேட்டையை பகுதியை சுற்றிலும் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

திருவாலங்காடு போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள சின்னம்மாபேட்டையில் தாங்கல் ஏரி, மணவூர், மருதவல்லிபுரம், ராஜபத்மாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் சர்வ சாதாரணமாக அமர்ந்தும் சூதாடி வருகின்றனர். இளைஞர்கள் பலரும் வேலைக்கு செல்லாமல் சூதாட்டத்தில் பணம், நகை உள்ளிட்டவற்றை வைத்து விளையாடி, அவற்றை இழக்கின்றனர்.

மேலும் தினக்கூலி வேலை செய்பவர்கள் தொழிலுக்கு செல்லாமல் சூதாடி வருகின்றனர். இதுகுறித்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

மேலும் இரவு, பகலில் கிராமப்புறங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பலரும் சூதாட்டங்களை நடத்தி இளைஞர்களை திசை திருப்பி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us