/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம் அம்போ குப்பை எரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி 3 அல்லது 4 படம் வைக்கவும்

ADDED : ஏப் 25, 2024 01:22 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக, தலா 1 லட்சம் ரூபாய் மதிப்பில், 43 ஊராட்சிகளிலும் கட்டப்பட்ட மண்புழு உரக்கொட்டகை பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகி வருகின்றன.
அதேபோல், தலா 24 லட்சம் மதிப்பில், கடம்பத்துார் ஒன்றியத்தில் வெங்கத்துார், மப்பேடு, பேரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது.
இந்த உரக்கிடங்குகளும் இன்று வரை முறையான பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. இதில், வெங்கத்துார் ஊராட்சியில் கன்னியம்மன் நகரில் அமைக்கப்பட்ட உரக்கிடங்கு, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பால் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
பேரம்பாக்கம், மப்பேடு பகுதியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் பெயரளவிற்கு செயல்பட்டு வருகின்றன.
இதனால், கடம்பத்துார் ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியுள்ளதால், குப்பையை முறையாக அகற்றாமல் நெடுஞ்சாலையோரம் தீ வைத்து பகுதிவாசிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தீயிட்டு எரித்து வருகின்றனர்.
இதனால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.