sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சொர்ணவாரி பருவ நெல் அறுவடை 59 இடங்களில் கொள்முதல் நிலையம்

/

சொர்ணவாரி பருவ நெல் அறுவடை 59 இடங்களில் கொள்முதல் நிலையம்

சொர்ணவாரி பருவ நெல் அறுவடை 59 இடங்களில் கொள்முதல் நிலையம்

சொர்ணவாரி பருவ நெல் அறுவடை 59 இடங்களில் கொள்முதல் நிலையம்


ADDED : ஆக 10, 2024 11:07 PM

Google News

ADDED : ஆக 10, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் செய்வதற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.

கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:

திருவள்ளுர் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் 60 ஆயிரத்து 210 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ளது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 5.50 கோடி கிலோ நெல் வரவு எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, 14 வட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வாயிலாக, 59 இடங்களிலும் அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் 2,450 ரூபாய், பொது ரகம் 2405 ரூபாய்க்கும் விற்பனை செய்யலாம்.

கடந்த சம்பா மற்றும் நவரை பருவங்களில் பணியாற்றிய பட்டியல் எழுத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க, வேளாண் உழவர் நலத்துறை வாயிலாக, சிறப்பு கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், தங்களது அடங்கல் சான்றிதழை இடைத்தரகர் மற்றும் வெளிவியாபாரிகளிடம் வழங்கினால், அவர்கள் இரண்டு வருடம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலையீடு செய்யும் இடைத்தரகர் மற்றும் வெளி வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏதேனும் புகார் இருப்பின், 93448 39708, 044 -27662228 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.






      Dinamalar
      Follow us