/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடகளத்தில் 'செயின்ட் ஜோசப்' சாம்பியன்
/
தடகளத்தில் 'செயின்ட் ஜோசப்' சாம்பியன்
ADDED : ஆக 10, 2024 06:07 AM

சென்னை: அண்ணா பல்கலையின் மூன்றாவது மண்டலத்திற்கான போட்டிகளில், செயின்ட் ஜோசப் கல்லுாரி, தொடர்ந்து 22வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று, சாதனை படைத்தது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், மொத்தம் 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களுக்குள் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மூன்றாவது மண்டலத்திற்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள், மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கல்லுாரிகளில் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டன.
இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கான கோப்பைகள் வழங்கும் விழா, கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மூன்றாவது மண்டலத்தில், செம்மஞ்மேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி, 240 புள்ளிகளை பெற்று, தொடர்ந்து 22வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று, சாதனை படைத்துள்ளது.