/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெங்களூரு சென்ற ரயில் மீது கல்வீச்சு
/
பெங்களூரு சென்ற ரயில் மீது கல்வீச்சு
ADDED : மே 02, 2024 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்,:பீஹார் மாநிலம் பாட்னா மாவட்டம் டானாபூரில் இருந்து பெங்களூரு எஸ்.எம்.வி.டி., வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகே, சிக்னல் கிடைக்காமல் நிறுத்தப்பட்டது.
அப்போது மர்ம நபர் ஒருவர் ரயிலின் 'ஏ-2 - ஏசி' பெட்டியின் கழிப்பறை ஜன்னல் கண்ணாடி மீது கல் வீசினார். இதில், ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய விசாரணையில், அதே ரயிலின் பொது பெட்டியில் பயணம் செய்த ரிஸ்வான், 22, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

