/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சப் - ஜூனியர் வாள் வீச்சு தாம்பரத்தில் இன்று துவக்கம்
/
சப் - ஜூனியர் வாள் வீச்சு தாம்பரத்தில் இன்று துவக்கம்
சப் - ஜூனியர் வாள் வீச்சு தாம்பரத்தில் இன்று துவக்கம்
சப் - ஜூனியர் வாள் வீச்சு தாம்பரத்தில் இன்று துவக்கம்
ADDED : மார் 03, 2025 11:48 PM
சென்னை, தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பில், மாநில அளவிலான சப் - ஜூனியர் வாள் வீச்சு போட்டி, இன்று கிழக்கு தாம்பரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் துவங்குகிறது.
இதில், 14 வயதுக்குட்பட்ட சப் - ஜூனியருக்கான போட்டிகள் நடக்கின்றன. இதில், பாயில், எப்பி மற்றும் சேபர் ஆகிய பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
போட்டியில் வெற்றி பெறுவோர், இம்மாதம் இறுதியில், ஒடிசாவில் நடக்கவுள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என, தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்தினர் தெரிவித்தனர்.