/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசையில் பொங்கிய கழிவுநீர் துாங்கிய அதிகாரிகளால் அவதி
/
திருமழிசையில் பொங்கிய கழிவுநீர் துாங்கிய அதிகாரிகளால் அவதி
திருமழிசையில் பொங்கிய கழிவுநீர் துாங்கிய அதிகாரிகளால் அவதி
திருமழிசையில் பொங்கிய கழிவுநீர் துாங்கிய அதிகாரிகளால் அவதி
ADDED : ஆக 14, 2024 11:13 PM

திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 40.60 கோடி ரூபாய் செலவில், 2007ல் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் துவக்கப்பட்டு, 2019ம் ஆண்டு நிறைவடைந்தது.
ஐந்தாண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை பாதாள சாக்கடை பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஜவகர் தெருவில், பாதாள சாக்கடை அடைப்பு குறித்து பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.