/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் கோடை மழை பகுதிவாசிகள் உற்சாகம்
/
கும்மிடியில் கோடை மழை பகுதிவாசிகள் உற்சாகம்
ADDED : மே 10, 2024 01:09 AM

கும்மிடிப்பூண்டி, கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக நேற்று கும்மிடிப்பூண்டியில் பெய்த மழையால் மக்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.
கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.
பகல் நேரத்தில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வந்த நிலையில், நேற்று காலை கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், கோடை மழை பெய்தது.
ஒரு மணி நேரம் பெய்த மழையின் சுவடு தெரியாத வண்ணம், வறண்டு இருந்த நிலம் மொத்த மழை நீரை உறிஞ்சியது.
மழை விட்ட பின் நேற்று நாள் முழுதும், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து இதமான வானிலை நிலவியதால் மக்கள் உற்சாகம் அடைந்தனர்.