/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் மழையிலும் போடப்பட்ட தார்ச்சாலை
/
திருத்தணியில் மழையிலும் போடப்பட்ட தார்ச்சாலை
ADDED : ஆக 12, 2024 05:28 AM

திருத்தணி : திருத்தணி அருகே மழையில் நனைந்தபடியே, நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தார்ச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது சமூக வலைதளத்தில் பரவியது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அரக்கோணம் சாலை, சித்துார் சாலை மற்றும் பழைய சென்னை சாலை போன்றவற்றில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு உள்ளதால், இந்தச் சாலைகள் குறுகின. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் நடந்து வந்தன.
இதையடுத்து, திருத்தணி நெடுஞ்சாலை துறை, சாலை விரிவாக்கம் செய்வதற்கு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், 9.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. சாலை விரிவாக்க பணிகள் சில மாதங்களாக நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் மாலை, திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில், நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் தார்ச்சாலை போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பலத்த மழை பெய்யத் துவங்கியது.
அந்த மழையையும் பொருட்படுத்தாமல், சாலை போடும் பணி தொடர்ந்தது. கொட்டும் மழையிலும் தார்ச்சாலை போடும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இப்படி மழையில் தார்ச்சாலை அமைத்தால், எப்படி சாலை தரமானதாக அமையும் என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

