/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலாபுரத்தில் திருவாசகம் முற்றோதல்
/
பாலாபுரத்தில் திருவாசகம் முற்றோதல்
ADDED : மார் 02, 2025 11:46 PM

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை கீழ்பாலாபுரம் கிராமத்தின் தென்கிழக்கில், பார்வதியம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. இதற்கான கொடியேற்றம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.
மறுநாள் சனிக்கிழமை காலை பன்னிரு திருமறை மற்றும் மாணிக்கவாசகர் வீதியுலா நடந்தது. அன்றிரவு கோவில் வளாகத்தில், சிவதாண்டவம் நடத்தப்பட்டது.
நேற்று காலை முதல் மாலை வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. திருக்கழுக்குன்றம் தாமோதரன் தலைமையிலான சிவனடியார்கள் முற்றோதல் நிகழ்த்தினர். இதில், பாலாபுரம், தியாகாபுரம், அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.