/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி கழிவுகளை கையாள்வதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
கும்மிடி கழிவுகளை கையாள்வதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
கும்மிடி கழிவுகளை கையாள்வதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
கும்மிடி கழிவுகளை கையாள்வதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஏப் 29, 2024 11:37 PM

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து, தினமும் 4 டன் குப்பை கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
அதை சேகரித்து, முறையாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள போதிய இடவசதி இல்லாத காரணங்களால், நகரின் பல பகுதிகள் குப்பை மேடாக மாறி வருகின்றன.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் துாய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பை கழிவுகளை, ஆங்காங்கே குவித்து எரிப்பதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், சுகாதாரம் பாதிப்பதுடன், நகர் பகுதி முழுதும் பொலிவு இழந்து காணப்படுகிறது.
குறிப்பாக, கன்னியம்மன் கோவில் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கழிவுகளை குவித்து எரிப்பதை, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் தினசரி வேலையாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சுகாதாரமாகவும், துாய்மையாகவும் பராமரிக்க வேண்டிய கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், இப்படி நகரின் சுகாதாரம் மற்றும் பொலிவை பாதிக்கும் வகையில், செயல்பட்டு வருவதை கண்டு பகுதிவாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

