/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
‛'போக்சோ' வழக்கில் சிக்கியவர் தற்கொலை
/
‛'போக்சோ' வழக்கில் சிக்கியவர் தற்கொலை
ADDED : மார் 31, 2024 11:19 PM
செங்குன்றம்: சென்னை பாடியநல்லுார், மஹாலட்சுமி நகரில், 'விக்னேஷ் ஏஜன்சி' என்ற கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் உள்ளது. இதில், தஞ்சாவூர், திருவிடைமருதுாரைச் சேர்ந்த ஜெனிஸ், 20, என்பவர், அங்கே தங்கி, பாரம் துாக்கும் பணி செய்து வந்தார்.
நேற்று காலை 6:00 மணிக்கு, அவருடன் பணிபுரியும் விஜய் என்பவர் கழிப்பறைக்கு சென்ற போது, ஜெனிஸ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் ஜெனிஸ், ஊட்டியில் இருந்த போது, சிறுமியை காதலித்த புகாரில், போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றது தெரிந்தது.
அதன்பின், மூன்று மாதங்களுக்கு முன் தான் விடுதலையானார். அதன்பின், பாடியநல்லுாருக்கு வந்து, மேற்கண்ட நிறுவனத்தில், பாரம் துாக்கும் வேலை செய்து வந்துள்ளார். காதல் பிரச்னையால், மன உளைச்சலில் இருந்த ஜெனிஸ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

