/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
83 குளங்கள் வெட்டும் பணி திருத்தணி ஒன்றியத்தில் சுறுசுறு
/
83 குளங்கள் வெட்டும் பணி திருத்தணி ஒன்றியத்தில் சுறுசுறு
83 குளங்கள் வெட்டும் பணி திருத்தணி ஒன்றியத்தில் சுறுசுறு
83 குளங்கள் வெட்டும் பணி திருத்தணி ஒன்றியத்தில் சுறுசுறு
ADDED : ஆக 31, 2024 10:59 PM

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், 288 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்கு, ஊராட்சிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் தீர்மானித்து குளங்கள் வெட்டுவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.
இதையடுத்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்த பட்சம் இரண்டு குளங்கள் முதல் அதிக பட்சமாக, ஐந்து குளங்கள் என மொத்தம், 83 குளங்கள் உருவாக்குவதற்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் 100 நாள் தொழிலாளர்கள் மூலம் குளம் வெட்டும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இது குறித்து திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட, இடத்திற்கு ஏற்றவாறு, 120 முதல் 180 மீட்டர் நீளமும், 50 முதல் 120 மீட்டர் அகலம் கொண்ட குளம், 1.80 மீட்டர் ஆழத்திற்கு உருவாகப்படவுள்ளது.
குளத்திற்கு ஏற்றவாறு, 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. 100 நாள் தொழிலாளர்கள் மூலம் குளம் வெட்டப்படுகிறது. பருவ மழைக்கு முன்னதாக குளங்கள் உருவாகி தண்ணீர் சேமிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.