/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளி மீது 'ஆசிட்' வீச்சு திருடர்கள் அட்டூழியம்
/
தொழிலாளி மீது 'ஆசிட்' வீச்சு திருடர்கள் அட்டூழியம்
தொழிலாளி மீது 'ஆசிட்' வீச்சு திருடர்கள் அட்டூழியம்
தொழிலாளி மீது 'ஆசிட்' வீச்சு திருடர்கள் அட்டூழியம்
ADDED : மே 19, 2024 09:46 PM
ஓட்டேரி: சென்னை, புளியந்தோப்பு, கனகராஜ் தோட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ், 30. இவர், அதே பகுதியில், இரு சக்கர வாகனங்களுக்கு, பஞ்சர்' ஒட்டும் கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம், ஓட்டேரி, கொசப்பேட்டை மார்க்கெட் பகுதியில், மது போதையில் துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, அங்கு சென்ற நால்வர், அவரது சட்டைப்பையில் இருந்து, பணத்தை எடுக்க முயன்றனர். ஆனால், ரியாஸ் விழித்து, அவர்களை எதிர்த்தார்.
அப்போது, அவரை தாக்கிய மர்ம நபர்கள் பாட்டிலில் வைத்திருந்த அமிலத்தை, அவரது முகத்தில் வீசினர்.
இதில், படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார். ஓட்டேரி போலீசார், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மீது அமிலம் வீசிய மர்மநபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.