/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
/
வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : ஆக 28, 2024 07:46 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தில் ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில், கடந்த 26ம் தேதி முதல் கிருஷ்ணர் ஜெயந்தி விழா மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்றாம் நாளான நேற்று காலை, உற்சவர் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பட்டு வஸ்திரம் அணிந்து ராதா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
இதில், திருத்தணி, தாழவேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

