/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய விளையாட்டு போட்டி விண்ணப்பிக்க இன்று கடைசி
/
தேசிய விளையாட்டு போட்டி விண்ணப்பிக்க இன்று கடைசி
ADDED : ஆக 28, 2024 12:07 AM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்குகளில், நாளை நடைபெற உள்ள தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போர் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
மேஜர் தயான்சந்த் பிறந்த நாளை முன்னிட்டு, ஆக. 21 - 29 வரை தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், நாளை, 29ல் ஹாக்கி, வாலிபால், பேஸ்கட்பால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், 19, 25 மற்றும் 45 வயதிற்கு உட்பட்டோர் என, மூன்று பிரிவாக நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிகளில் ஆண், பெண், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள், இன்று 28 மாலை 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 74017 03482 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.