/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100 வாகனங்களில் பயணம் வி.சி., கூட்டத்தில் முடிவு
/
100 வாகனங்களில் பயணம் வி.சி., கூட்டத்தில் முடிவு
ADDED : செப் 17, 2024 08:12 PM
திருத்தணி:தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து வி.சி., கட்சியின் சார்பில், அக். 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மகளிர் மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று திருத்தணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட செயலர் தளபதி சுந்தர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்று, மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு நடத்துவதின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில், குறைந்தபட்சம், 100 வாகனங்கள் மூலம் 1,000க்கும் மேற்பட்ட பெண்களை மாநாட்டிற்கு அழைத்து செல்வது என, முடிவு எடுக்கப்பட்டது.