/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அறிவிப்பில்லா மின் தடை புழல் பகுதி மக்கள் அவதி
/
அறிவிப்பில்லா மின் தடை புழல் பகுதி மக்கள் அவதி
ADDED : மார் 10, 2025 12:13 AM
புழல், புழல் அடுத்த விநாயகபுரம், லட்சுமிபுரம், புத்தகரம் சுற்றுவட்டாரங்களில், அடிக்கடி ஏற்படும் மின்தடையால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
புழல் அருகே சூரப்பட்டு பிரதான சாலை, அய்யன் திருவள்ளூர் சாலை, திருமால் நகர், பத்மாவதி நகர், பாலாஜி நகர், உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, அவ்வப்போது, இரண்டு மணி நேரம், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.
அதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் கூறுகையில்,'ரமலான் நோன்பு ஆரம்பித்துள்ளது.
அதிகாலையில் வழிபாடு செய்யும் நேரத்தில் மின் தடை ஏற்படுகிறது. மதிய நேரமும் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்படுகிது.
கோடை துவங்கும் முன்பே மின்தடையால் அவதிப்பட நேரிடுகிறது. மின்வாரிய அதிாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், முறையான பதில் கிடைப்பதில்லை' என்றனர்.