ADDED : ஆக 18, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் இருந்து வயலுார் வழியாக, வடமங்கலம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஆங்காங்கே சேதமடைந்து, மெகா பள்ளங்களாக மாறியிருந்தன.
இதனால் இவ்வழியே செல்லும் பகுதிவாசிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும், விபத்தில் சிக்கி வருகின்றனர்.
அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் வடமங்கலம் நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

