/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விதிமீறி மண் அள்ள கிராமவாசிகள் எதிர்ப்பு
/
விதிமீறி மண் அள்ள கிராமவாசிகள் எதிர்ப்பு
ADDED : மார் 11, 2025 12:06 AM
திருத்தணி, திருத்தணி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளுக்கு கலெக்டரிடம் அனுமதி பெற்று, திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே உள்ளபட்டாபிராமபுரம் ஊராட்சி ஏரியில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாகஏரியில் மண் எடுத்து, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி களுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், நேற்று பட்டாபிராமபுரம் ஊராட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், விதிமுறைகளை மீறி அதிக ஆழம் தோண்டி மண் எடுப்பதாகக் கூறி, மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அப்போது கிராமவாசிகள், 'அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்' என்றனர்.
இதை தொடர்ந்து,தற்காலிகமாக ஏரியில்மண் எடுப்பது நிறுத்தப்பட்டது.