/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி தெருக்களுக்கு முகவரி தந்த தபால் நிலையத்திற்கு விடிவு எப்போது?
/
கும்மிடி தெருக்களுக்கு முகவரி தந்த தபால் நிலையத்திற்கு விடிவு எப்போது?
கும்மிடி தெருக்களுக்கு முகவரி தந்த தபால் நிலையத்திற்கு விடிவு எப்போது?
கும்மிடி தெருக்களுக்கு முகவரி தந்த தபால் நிலையத்திற்கு விடிவு எப்போது?
ADDED : மே 01, 2024 10:44 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில், ஆங்கிலேயர் காலத்தில் தபால் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. 80 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த தபால் நிலையம், கும்மிடிப்பூண்டி நகரின் பல பகுதியில் உள்ள வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
தபால் நிலையம் இயங்கிய பகுதிகளுக்கு, தபால் தெரு, பழைய தபால் தெரு என தெருக்களுக்கு முகவரி தந்ததே தவிர இன்று வரை தனக்கென சொந்த முகவரி இல்லாத நிலையே தொடர்கிறது.
தற்போது, ஜி.என்.டி., சாலையில், சரண்யா நகர் பகுதியில், தனியார் கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
அங்கு, செங்குத்தாக உள்ள இரும்பு படிகளில் ஏறி இறங்க முடியாமல் முதியவர்களும், பெண்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டியில் தபால் நிலையத்திற்கு சொந்தமாக, 1,046 சதுர அடி நிலம் உள்ளது.
பஜார் பகுதியின் மத்தியில், ஜி.என்.டி., சாலையோரம், ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் உள்ள அந்த இடம், தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், அந்த இடத்தை கையகப்படுத்தி, தபால் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தில் தபால் நிலையம் நிறுவ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

