/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி- - --சென்னை தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?
/
திருத்தணி- - --சென்னை தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?
திருத்தணி- - --சென்னை தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?
திருத்தணி- - --சென்னை தடத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?
ADDED : ஏப் 20, 2024 09:51 PM
திருத்தணி:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூர், பூந்தமல்லி வழியாக சென்னை கோயம்பேடு வரை, பத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆனால் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் சென்னைக்கு செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர். அதாவது, காலை, 6:00 மணியில் இருந்து காலை, 8:00 மணி வரையும், இரவு, 7:00 மணி மேல் சென்னைக்கு செல்வதற்கு திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பஸ்கள் இயக்கப் படுவதில்லை.
மாறாக திருத்தணி பைபாஸ் சாலை வழியாக சென்னை—திருப்பதி வரை இயக்கப்படும், 201 என்ற அரசு பேருந்துகளில் பயணியர் சென்னை, திருவள்ளூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து பைபாஸ் செல்வதற்கு ஒன்றரை கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே, காலை மற்றும் இரவு நேரத்தில் திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேரிடையாக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

