/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி புறக்காவல் நிலையம் மீண்டும் புத்துயிர் பெறுமா? அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க வியாபாரிகள் கோரிக்கை

ADDED : மே 23, 2024 12:03 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இருந்து, 2 கிலோமீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. பஜார் பகுதியில் நடைபெறும் அசம்பாவிதங்களை தடுக்க போலீசாரின் முழு நேர கண்காணிப்பு அவசியம் என்ற நிலை ஏற்பட்டது.
அதன்படி, கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், அங்குள்ள கே.எல்.கே., அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே நவீன புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2016 ஜூலை 13ம் தேதி புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அதன் நேரடி காட்சிகளை, புறக்காவல் நிலையத்தில் இருந்தபடி, எல்.இ.டி., திரையில் கண்காணித்து, அசம்பாவிதம் கண்டறியப்படும் இடத்தில், ஒலி பெருக்கி மூலம், எச்சரிக்கும் வசதியை வியாபாரிகள் சங்கத்தினர் ஏற்படுத்தி தந்தனர்.
கும்மிடிப்பூண்டி போலீசார் அதை முறையாக பராமரிக்க தவறியதன் விளைவாக, அடுத்த சில ஆண்டுகளில் பயனற்று போனது. முறையான பராமரிப்பின்றி கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் பழுதாகின.
புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா தொடர்பான கருவிகள் மற்றும் 'எல்.இ.டி., டிவி' பழுதாகி கிடப்பில் போடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், போலீசார் முறையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளாததால், அங்குள்ள வங்கிகளில் இருந்து பணம் எடுத்து செல்வோரை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே, இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளின் பாதுகாப்பு கருதி, புறக்காவல் நிலையத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்து, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை போலீசார் முறையாக கண்காணிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.