/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்னும் 3 நாட்களே உள்ளதால் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கும்
/
இன்னும் 3 நாட்களே உள்ளதால் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கும்
இன்னும் 3 நாட்களே உள்ளதால் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கும்
இன்னும் 3 நாட்களே உள்ளதால் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கும்
ADDED : மார் 25, 2024 06:23 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் காங்., சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பா.ஜ., சார்பில், பொன் வி.பாலகணபதி, நாம் தமிழர் கட்சியில், ஜெகதீஷ் சந்தர், பகுஜன் சமாஜ் சார்பில், தமிழ்மதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் கடந்த, 20ல் துவங்கியது. இருப்பினும் இதுவரை ஒருவர் கூட, மனு தாக்கல் செய்யவில்லை. வரும் 27ல் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.
இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இன்று முதல் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். இதற்காக, கலெக்டர் அலுவலகத்தில், 10 கண்காணிப்பு கேமராக்களுடன், வேட்பு மனு அறை தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பிற்காக, 50க்கும் மேற்பட்ட போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
l திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., பொன் வி. பாலகணபதி போட்டியிடுகிறார். இவரது மனைவி மீனாட்சி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கணவர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், அவர் பணியிடமாற்றம் செய்யப்படுவாரா என, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர், ''தேர்தல் விதிமுறைப்படி, வேட்பாளர் போட்டியிIம் இடத்தில் அவரது குடும்பத்தினர் அரசு பணியாற்றினால் பணியிடமாற்றம் செய்யப்படுவது நடைமுறை. எனவே தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து, பணியிடமாற்றம் செய்யப்படுவார்,'' என்றார்.

