/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
/
பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
ADDED : மே 14, 2024 08:26 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் மூவர் ரகளையில் ஈடுபடுவதாக மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மப்பேடு உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் சென்றபோது அங்கு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் போலீசாரைக் கண்டதும் இருவர் தப்பியோட பேரம்பாக்கம் அடுத்த கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ், 23 என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.