ADDED : பிப் 22, 2025 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரவீன், 30; எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இரவு, பிரவீன், அண்ணா நகர் ஏழாவது தெருவில் நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, மது போதையில் வந்த நபர் ஒருவர், நண்பனிடம் பேச வேண்டும் என கூறி, மொபைல் போன் கேட்டுள்ளார்.
பிரவீன் தர மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால், பிரவீனின் தலையில் வெட்டி, போனை பறித்து தப்பினார்.
பலத்த காயமடைந்த பிரவீன், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தலையில் 5 தையல்கள் போடப்பட்டன.
இது குறித்து விசாரித்த பட்டாபிராம் போலீசார், ஆவடி பாலாஜி நகரைச் சேர்ந்த, 17 வயது சிறுவனிடம் விசாரிக்கின்றனர்.